TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி மறியலில் இறங்கிய மக்கள் களத்துக்கு வந்த போலீசார்

Continues below advertisement

எல்லாரும் permission வாங்கிட்டு தான் கொடி  கம்பத்தை வைக்கிறாங்களா என தவெக கொடி கம்பத்தை அகற்றிய போலீசாரை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரக்கவாடி கிராமத்தில் விஜயின் ரசிகர்கள் தவெக கொடி கம்பத்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் அமைத்துள்ளனர்.

இந்த நிலையில் ராமநத்தம் போலீசார் அனுமதியின்றி தவெகவினர் கொடி கம்பத்தை அமைந்ததாக கூறி கொடி கம்பத்தை அங்கிருந்து அகற்றியுள்ளனர். இது குறித்த  தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் பேருந்து நிறுத்தம் அருகே ஒன்று கூடி  மீண்டும் அதே இடத்தில் தவெக கொடி கம்பத்தை  அமைத்து தர வேண்டும் என சாலையில் சாலை மறியல் செய்தனர். 

இதன் பின்னர் அதே இடத்தில் விசிகவினரும் தங்கள் கட்சி கொடி மற்றும் பந்தலை அமைக்க முற்ப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் அதற்கும் அனுமதி மறுத்துள்ள நிலையில் காவல்துறைக்கும் விசிகாவுக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது


இதன் பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை பொது மக்கள் அடுத்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram