Varunkumar IPS : “திருடர் கூட்டம்.. சாதி வெறி”மனைவி போட்டோவை மார்பிங் பொளந்து கட்டிய வருண் ips

Continues below advertisement

திரள்நிதி திருடர் கூட்டமும், சாதி வெறி இணையதள கூலிப்படையும் உன் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மகிழ்ச்சி அடைந்தனர், ஆனால் நீ ஒரு சிங்கப்பெண் என திறன் பதக்க விருது வென்ற தனது மனைவி வந்திதா பாண்டேவுக்கு அவரது கணவர் வருண் ஐபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதல் படி, தொடங்கப்பட்ட 'மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம்' அனைத்து காவல்துறையினரின் மன உறுதியை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளன்று இப்பதக்கம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வுப் பிரிவில் 7 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது  பட்டியலில் புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டேவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் தனது மனைவி வந்திதா பாண்டேவுக்கு விருது கிடைத்ததை அடுத்து அவரது கணவராண வருண் குமார் ஐபிஎஸ் வாழ்த்து சொல்லி  வாட்ஸ் அப்பில் ஸ்டேடஸ் பதிவிட்டுள்ளார். 

அவர் பதிவிட்டுள்ள பதிவில் திரள்நிதி திருடர் கூட்டமும், அவர்களின் சாதி வெறி இணையதள கூலிப்படையும் உன் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து மகிழ்ச்சி அடைந்தனர், பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றத்தில் துரித விசாரணையும் நடவடிக்கையும் எடுத்து UNION HOME Minister Investigation பதக்கத்தை வென்று சிங்கப்பெண் என்பதை நிரூபித்துவிட்டாய், வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே என்று பதிவிட்டுள்ளார்.

வந்திதா ஐபிஎஸ் உடன் மாவட்ட காவல் ஆய்வாளர் அம்பிகா, என் உதயகுமார், எஸ் பாலகிருஷ்ணன், acp கார்த்திகேயன் உட்பட7 பேர்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறக் பதக்க விருதை பெற உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram