
Trichy Siva: திருச்சி சிவாவுக்கு ஜாக்பார்ட்! ஸ்டாலின் அதிரடி Twist பொன்முடி எதிர்காலம் காலி?Ponmudi
திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுகவின் புதிய துணைப் பொதுச்செயலாளராக, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை நியமித்து ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது திமுக களம் சூடுபிடித்துள்ளது.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாய் வைத்திருப்பவர் அமைச்சர் பொன்முடி. ஒரு மேடையில் பேசிய அவர் விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதை குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்று கேட்டு அதற்கு கீழ்தரமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனத்தையும் பெற்றது. அரசியலில் மூத்த நபர், திமுகவின் முக்கிய தளகர்த்தர், அமைச்சர் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் அவர் இவ்வாறு கொச்சையாக பேசியுள்ளதாகவும், இவர் அமைச்சர் பொறுப்பை வகிக்க தகுதி அற்றவர் என்ற வகையிலும் அவருக்கு எதிராக கடும் எதிர்வினைகள் வந்துக்கொண்டிருந்தன.
இந்த நிலையில், பொன்முடியின் இந்த பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி நேரடியாக கடும் எதிர்ப்பை பதிவு செய்து கண்டனத்தை தெரிவித்துள்ளார். தற்போது திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் பொன்முடி வகித்து வந்த அந்த பதவியில் இருந்து, அவர் நீக்கப்பட்டத்தை தொடர்ந்து திருச்சி சிவாவிற்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிறந்த பேச்சாளராக மட்டுமின்றி, மாநிலங்களவையிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து ஐந்து முறை திமுக சார்பில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கி வந்த அமைச்சர் பொன்முடி உயர் கல்வித்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார். ஆனாலும், பல்வேறு இடங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளை தெரிவித்து, கட்சி தலைமைக்கு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் தான், விலை மாதுவை குறிப்பிட்டு அவர் பேசிய பேச்சுகளுக்கு சொந்த கட்சியில் இருந்தே, குறிப்பாக கனிமொழி உள்ளிட்டோரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைதொடர்ந்து, பொன்முடி வகித்து வந்த திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்தது. அந்த பதவி தான் தற்போது திருச்சி சிவாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் காட்டிய திருச்சி சிவா, மாணவராக இருந்தபோது, 1976 ஆம் ஆண்டு அவசரநிலையின் போது உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டு அவர் திமுக மாவட்ட மாணவர் பிரிவின் அமைப்பாளராக இருந்தார் . 1982 மற்றும் 1992 க்கு இடையில் அவர் திமுக இளைஞர் பிரிவின் துணைச் செயலாளராகவும் , பின்னர் 1992 மற்றும் 2007 க்கு இடையில் அதன் செயலாளராகவும் பணியாற்றினார். அவர் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தார் . கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி மற்றும் பிற பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அவர் செப்டம்பர் 2009 முதல் மே 2012 வரை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நீதிமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் ஏப்ரல் 2013 முதல் ஜூலை 2013 வரை கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பற்றிய நாடாளுமன்ற மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இதுபோக நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுக்களிலும் திருச்சி சிவா இடம்பெற்றுள்ளார்