EPS-OPS-வேலுமணி ஐ குறிவைத்த PTR -ன் 10 Points | White Paper Report | EB | Family debt | Transport

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச்செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:- கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது மகாராடிரா, குஜராத், கர்நாடக மாநிலங்கள் நிதிநிலையை சரியாக கொண்டிருந்ததால் கொரோனா காலத்தில் சொல்லும் அளவிற்கு அவர்கள் நிதிநிலையை பள்ளத்தில் தள்ளவில்லை 2011-16ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 17ஆயிரம் கோடியாக இருந்தது 2016-21ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் உள்ளது தமிழநாடு அரசின் நிறுவனங்களான மின்சாரவாரியம் மற்றும் போக்குவரத்துக்கழகம் கடும் நிதிநெருக்கடியில் உள்ளது.

தமிழ்நாடு அரசின் உற்பத்தியின் அடிப்படையிலான மொத்த வருமானம் 13.35 % இருந்த நிலையில் தற்போது 8.7% ஆக குறைந்துள்ளது தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17,000 கோடியாக இருந்தது 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கிறது பூஜ்ஜியவரியில் பயனடைவது ஏழை எளிய மக்கள் கிடையாது; ஜீரோ வரி முறையால் பணக்காரர்கள்தான் அரசிடம் வராத வரிவருவாய் பெரும் பணக்காரர்களிடமும், ஒப்பந்ததாரர்களிடமும் தேங்கி உள்ளது; எனவே இவர்களிடம் வரியை முறையாக வசூலிக்கப்பட வேண்டும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் 1200 கோடியை செலுத்தவில்லை பொறுப்பான அரசு என்பது வளர்ச்சிக்கும் சமூகநீதிக்கும் உதவ வேண்டும் உலகப்பொருளாதார நெருக்கடி வந்தால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்படும் அரசுப்பேருந்துகள் ஒரு கிலோ மீட்டர் ஓடினால் 59 ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது மின் துறையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட இழப்பு 34 ஆயிரம் கோடியாக இருந்த நிலையில் ஆட்சியில் 1.34 லட்சம் கோடியாக உயர்வு இது கடைசி வெள்ளை அறிக்கை இல்லை;

இதுதான் முதல் வெள்ளை அறிக்கை- இனி வரும் காலங்களில் துறைவாரியாக வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் சொத்துவரி 2008ஆம் ஆண்டில் இருந்து மாற்றப்படவில்லை; சொத்துவரியை சட்டப்படி உயர்த்த வேண்டிய தேவை உள்ளது எல்லோருக்கும் எல்லாம் இலவசம் என்றால் அதை எந்த அரசாங்கத்தாலும் வழங்க முடியாது இந்தியாவிலேயே சிறந்த நல்வாழ்வு திட்டங்களை கொடுக்கும் அரசாங்கமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என முதல்வர் நினைக்கிறார் தேவைப்படும் நபர்களுக்கு மட்டுமே இலவசங்களை வழங்க வேண்டும்; என்னை கேட்டால் இதைத்தான் முதல்வரிடம் சொல்லுவேன் தமிழ்நாட்டில் கடந்த 7 ஆண்டுகளாக சீர்கெட்டு இருக்கும் நிதிநிலையை 5 ஆண்டுக்குள் சரி செய்ய முடியும் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது வெள்ளை அறிக்கையை காரணம்காட்டி திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாமல் செல்லமாட்டோம்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram