SP Velumani : இங்கயும் கிச்சடிதானா?வேலுமணி வீட்டில் அலுத்துக்கொண்ட அதிமுக தொண்டர்கள்!
கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டின் முன்பு போராடும் அதிமுகவினருக்கு உணவு வழங்கப்பட்டது. போராடுபவர்களுக்கு காலை உணவாக உப்புமா கொடுக்கப்பட்ட நிலையில் மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. மேலும், எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு குளிர்பானம் வழங்கப்பட்டது.
அதனை வாங்க அதிமுக தொண்டர்கள் அலைமோதினார்கள். கோவை குனியாமுத்தூரில் உள்ள வேலுமணி வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மொத்தமாக அவருக்கு 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையால் வேலுமணியின் முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இதன் காரணமாக 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.