TN Cabinet Shuffle :முதல்வரின் மேஜையில் ரிப்போர்ட்..கலக்கத்தில் 3 அமைச்சர்கள்! பரபரக்கும் அறிவாலயம்!

Continues below advertisement

எப்படியும் இந்த முறை அமைச்சரவையில் பதவி வாங்கி விட வேண்டும் என ஒரு குரூப்பும், இருக்கும் அமைச்சர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என ஒரு குரூப்பும் திமுக தலைமையிடம் முட்டி மோதி வருவதால் அறிவாலயம் பரபரத்துக் கொண்டிருக்கிறது..

செந்தில் பாலாஜி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தது முதலையே தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன ஆனால் எலக்சனுக்கு முன்னாடி வேண்டாம் என நினைத்த தலைமை அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறது. 

எனினும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த கையோடு நிச்சயம் அமைச்சரவை மாற்றமும் இருக்கப் போகிறது என்பதுதான் தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக். 

அதற்காக தற்போதே கட்சி சார்பிலும், உளவுத்துறை சார்பிலும் தனித்தனி ரிப்போர்ட்டுகள் தயாராகி வருகின்றன. 

குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலின் போது சில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் சரியில்லை என்று தலைமைக்கு ரிப்போர்ட் போனது. அதில் நாமக்கலில் அமைச்சர் மதிவேந்தனம், மேற்கு மாவட்ட செயலாளரான மதுரா செந்திலின் பெயரும் அடிபட்டது. ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி, ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் என அந்த லிஸ்ட் சில அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் பெயர்கள் இருந்தன. சிலருக்கு கட்சி தலைமை இடம் இருந்து வார்னிங் வந்தது, சில தொகுதிகளுக்கு கூடுதலாக வேலை பார்க்க வேறு அமைச்சர்களை அனுப்பி வைத்தார் ஸ்டாலின். 

இந்நிலையில் தான் தற்போது கட்சிக்குள் ஒரு குழுவை அமைத்து புகார்கள் அனைத்தும் தூசி தட்டப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்த அமைச்சரவை மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதில் ஹிட் லிஸ்டில் அமைச்சர் மதிவேந்திரன் பெயர் அடிபடுவதாக சொல்லப்படுகிறது, அதனால் அந்த அமைச்சர் பதவியை கைப்பற்ற திமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. அதே நேரம் தன்னுடைய பதவியை பாதுகாத்துக் கொள்ள அமைச்சர் தரப்பிலும் தலைமைக்கு தூது அனுப்பப்பட்டு வருகிறது. 

ராஜ கண்ணப்பன், முத்துசாமி போன்ற சில சீனியர் அமைச்சர்கள் இலாக்காக்களும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனுடைய இலாக்காக்கள் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தோம், அந்த வகையில் நிம்துறை மீண்டும் பிடிஆருக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. ஆனால் உயர்கல்வி துறையை பி டிஆர்க்கு வழங்கி ஆளுநர் ஆர் என்றதுக்கு செக் வைக்க நினைக்கிறதாம் திமுக தலைமை. மேலும் செந்தில் பாலாஜி இடமிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் வழங்கப்பட்ட மின்சாரத் துறை, மற்றும் அமைச்சர் முத்துசாமி இடம் வழங்கப்பட்டிருந்த மதுவிலக்கு ஆயத்திருவை துறையும் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானி பெயர் நீண்ட நாட்களாகவே ரேடாரில் இருந்து வருகிறது, அவருக்கு எதிராக உள்ளூர் திமுகவிலேயே கோஸ்டி பூசல் நிலவி வருகிறது, செஞ்சி மஸ்தான் மீதும் அவரின் உறவினர்கள் மீதும் தலைமைக்கும் வெவ்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் இம்முறை அவர் அமைச்சரவையில் இருந்து கழட்டி விட படலாம் என்ற தகவல்களும் உலா வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம் மீண்டும் அமைச்சரவைக்குள் நுழைந்து விட வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார் ஆவடி நாசர்.

இளைஞரணி சேர்ந்தவர்களும் உதயநிதி மூலமாக அமைச்சரவையில் நுழையா காய்களை நகர்த்தி வருகின்றன. 

இத அனைத்தையுமே திமுகவின் சீனியர் குழு ஒன்று தீவிரமாக அறிவாலயத்தில் ஆலோசித்து வருகிறது, அவ்வப்போது இது குறித்த அப்டேட்டுகளையும் தலைமைக்கு சொல்லி வருகிறது. எனினும் நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவரும் வரை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது தலைமை. அதன் காரணமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று வெளிவரும் செய்திகள் திமுக அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram