Arvind Kejriwal : ’’முதல்வர் பதவி ராஜினாமா?’’கெஜ்ரிவால் சொன்ன SECRET!பாஜகவுக்கு செக்!
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாதது ஏன் என்பது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமினில் வெளிவந்து தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், முதல்வர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்தும், தனது கைது கட்சியின் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
"பதவி மீது எனக்கு எந்த பேராசையும் இல்லை. வருமான வரித்துறை வேலையை ராஜினாமா செய்துவிட்டு, டில்லியில் 10 ஆண்டுகள் சேரியில் பணிபுரிந்தேன்.
முதல்வராக பதவியேற்றதும், 49 நாட்களுக்கு பின், தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தேன். இந்த முறை, நான் வேண்டுமென்றே தான் ராஜினாமா செய்யவில்லை, 2015 ல் ஆம் ஆத்மிக்கு 67 இடங்களில் வெற்றி பெற்றது 2020 ல் 62 இடங்கள் அதாவது 55 வாக்கு சதவீதத்திற்கும் மேலாக நாங்கள் பெற்றுள்ளோம். மோடிக்கு நன்றாக தெரியும் டெல்லியில் ஆம் ஆத்மியை அவரால் வீழ்த்தவே முடியாதென்று, அதனால் வேண்டுமென்றே சதி திட்டம் தீட்டி என்னை கைது செய்து சிறையில் அடைத்தார். அப்போது தான் நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் எனது அரசு சரியும் என அவர் எண்ணினார்..அவரது சதி அரங்கேற நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்
தேர்தல் அறிவிப்பிற்கு பின் என்னை கைது செய்து பாஜக் பெறும் தவறு இழைத்துவிட்டது. நான் இல்லை என்றால் ஆம் ஆத்மியிம் தேர்தல் பணிகளில் தோய்வு ஏற்படும், எங்கள் கட்சி சிதையும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அனைத்துமே நேர்மாறாக நடந்துள்ளது. கட்சியின் ஒற்றுமை மேலோங்கியுள்ளது. தொண்டர்கள் விறுவிறுப்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அவர்கள் மீது ஆத்திரத்தில் உள்ளனர். சர்வாதிகாரம் என்ற வார்த்தை திரும்பும் பக்கம் எல்லாம் ஒலிக்கிறது. சர்வாதிகாரத்தையும் மோடி என்ற சர்வாதிகாரியையும் எதிர்த்து நாம் வாக்களிக்க வேண்டும் என ஆக்ரோஷமாக பேசியுள்ளார் கெஜ்ரிவால்.