TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?

Continues below advertisement

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெற உள்ள நிலையில், செந்தில் பாலாஜி உட்பட 4 அமைச்சர்கள் புதிதாக களத்தில் நுழைய உள்ளனர். இந்நிலையில் புதிதாக பதவியேற்க உள்ள செந்தில் பாலாஜி நாசர் கோவி செழியன் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு என்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்று அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சரும் முதல்வர் முக ஸ்டாலினின் மகனுமான உதயநிதி இன்று துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். புதிய ளுக்கு மதியம் 3 30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்யப்பட உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் ம்ற்றும் துணை முதல்வர் அறிவிப்பு நேற்று இரவு ஆளுநர் மாளிகை செய்தி மூலம் வெளியானது. அதன்படி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சராக உள்ள அவருக்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நிர்வகித்து வந்த திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதலாக  ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோக, 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, 3 அமைச்சர்கள் புதியதாக அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பால்வளத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ், சிறுபான்மையின நல அமைச்சராக உள்ள செஞ்சி மஸ்தான், வன அமைச்சராக இருந்த K ராமசந்திரன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஆவடி நாசர், கோவி.செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் அண்மையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளனர்.

செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்படுவார் என்ற பேச்சு நிலவி வந்த நிலையில், தற்போது அவரது பெயர் புதிய அமைச்சர் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையையே அவருக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றபோது முத்துச்சாமியிடம் மது விலக்கு இருந்தது. தங்கம் தென்னரசுவிடம் மின்சாரம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலை அவை மீண்டும் செந்தில் பாலாஜிக்கே ஒதுக்கப்பட உள்ளது.

அமைச்சர் கே. ராமச்சந்திரனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவர் அரசு கொறாடவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அமைச்சர் ராமச்சந்திரன் வசம் இருந்த சுற்றுலாத்துறை ஆர்.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பொன்முடி வசம் இருந்த உயர்கல்வித்துறை முனைவர் கோவி.செழியனுக்கு வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் மஸ்தான் வசம் இருந்த சிறுபான்மையினர் துறை சா.மு.நா

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram