TN Assembly Centenary : சட்டப்பேரவையில் இதுவரை யார் படங்கள் இடம்பெற்றுள்ளது தெரியுமா?

Continues below advertisement

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு சென்னை மாகாணமாக இருந்தபோது, 1921ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இதன்படி, சென்னை சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நடப்பாண்டில் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட எண்ணிய முதல்வர், கடந்த மாதம் டெல்லி சென்றபோது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தார். அவர் ஒதுக்கிய தேதியின் அடிப்படையில், ஆகஸ்டு 2-ந் தேதி(இன்று) சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்பு, முறைப்படி அதற்கான அழைப்பிதழை டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் வழங்கினார். இதையடுத்து, சட்டப்பேரவை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து இன்று காலை புறப்படும் அவர் விமானம் மூலம் மதியம் 12.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்க உள்ளனர். விமானநிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செல்கிறார். அங்கு மதிய உணவுக்கு பிறகு அவர் சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், 4.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் குடியரசுத் தலைவர், தலைமைச் செயலகத்திற்கு வருகிறார். மாலை 5 மணியளவில் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram