Thanga Tamil Selvan : திமுக எம்.பி ENTRY... குஷியான அதிமுகவினர்! சிரித்த ஆர்.பி.உதயகுமார்

Continues below advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த திமுக எம்.பி தங்கதமிழ்செல்வனை பார்த்ததும் அதிமுகவினர் உற்சாகமாகி கையசைத்தது கவனத்தை ஈர்த்தது.

அதிமுகவில் அரசியலை தொடங்கிய தங்க தமிழ்செல்வன் பின்னர் அமமுகவில் சேர்ந்து டிடிவி தினகரனுடன் கைகோர்த்தார். இறுதியில் அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பில் தனது சொந்த தொகுதியான தேனியில் களமிறங்கிய அவர், டிடிவி தினகரனையே வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து அவர் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் அதிமுக சார்பில் போதை பொருள் ஓழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த திமுக எம்.பி தங்க தமிழ்செல்வனை பார்த்த அதிமுகவினர் கையசைத்து சிரித்தனர். ஆர்.பி.உதயகுமாரும் பேசிக் கொண்டே அவரை பார்த்து சிரித்தார். பின்னர் தங்க தமிழ்செல்வனும் கையெடுத்து கும்பிட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்தது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram