Amudha IAS : ”அமுதாவை கூப்பிடுங்க” மீண்டும் முக்கிய பொறுப்பு! ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்
உள்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து அமுதா IAS மாற்றப்பட்ட நிலையில், தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் திட்டத்திற்கு ஸ்பெஷல் ஆபிசராக மீண்டும் அமுதா IAS-ஐ நியமித்துள்ளார் ஸ்டாலின்..
களப்பணிக்கு பெயர் போன ஆபிஸர் தான் அமுதா ஐஏஎஸ். இவரை மத்திய ஆட்சி பணியில் இருந்து ஸ்பெஷலாக இங்கே வரவழைத்தார் ஸ்டாலின். வந்த சில காலங்களிலேயே அவருக்கு உள்துறை செயலாளர் என்ற தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்ட்ரோலில் வரும் முக்கியமான பொறுப்பும் வழங்கப்பட்டது.
ஆனால் அப்படிப்பட்ட பவர்புல் போஸ்டிங்கில் இருந்து அண்மையில் அமுதா ஐஏஎஸ் மாற்றப்பட்டார். அதற்கு காரணம் மக்களவைத் தேர்தல் வெற்றி என்ற இனிப்பான செய்திக்கு பிறகு, திமுகவுக்கு நடந்த பல கசப்பான சம்பவங்களே.
கள்ளக்குறிச்சி விஷ சாராயர மரணம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்க் படுகொலை, மேலும் தமிழ்நாட்டில் அடுத்தடுத்தாக நடந்த கொலை சம்பவங்களால் அதிமுக, பாஜக மட்டுமின்றி தேசிய கட்சி தலைவரான மாயாவதி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என விமர்சிக்கும் நிலை உண்டானது.
சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு அமலாக்கம் ஆகிய இரண்டுமே உள்துறையின் கட்டுப்பாட்டில் வர, இந்த விவகாரங்கள் அனைத்துமே அமுதா IAS பக்கம் திரும்பியது,
மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளும் கள்ளக்குறிச்சி, மரக்காணம் ஆகிய இரண்டு கள்ளச்சாராய மரணத்திலும் அதிக நடவடிக்கைகள் தங்கள் பக்கமே பாய்ந்தாக முணுமுணுத்தது முதல்வரின் காதுகளுக்கு சென்றது.
இதனால் உள்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றபட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக மாற்றபட்டார் அமுதா IAS.
இந்த மாற்றம் பலரது புருவத்தை உயர்த்திய நிலையில், மீண்டும் தனக்கு கீழ் வரும் நேரடி திட்டத்திற்கு ஸ்பெஷல் ஆபிசராக அமுதா IAS-ஐ நியமித்துள்ளார் ஸ்டாலின். மக்களின் முகவரி, மக்களுடன் முதல்வர் மற்றும் பிற பொதுமக்கள் குறை தீர்ப்பு திட்டத்திற்கு சிறப்பு அதிகாரியாக அமுதா IAS நியமித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின்.