Thadi Balaji Tatoo: “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜி

Continues below advertisement

விஜய் எப்போதும் என்னோட ஹார்ட்டோட இருக்கனும்னு ரொம்ப ஆச என்று..விஜயின் உருவத்தை நடிகர் தாடி பாலாஜி தன் தன் நெஞ்சில் பச்சை குத்தி இருக்கிறார். அவரது இந்த செயல் தவெக தொண்டர்களை அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்த உடனே அவருடைய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் தாடி பாலாஜி.  அதோடு தவெக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.  இந்த நிலையில்தாடி பாலாஜி தன்னுடைய நெஞ்சில் விஜயின் உருவத்தை டாட்டூ போட்டு இருக்கிறார்.

 

இந்த டாட்டூ போடுவதற்காக 7 மணி நேரம் வலியை தாங்கிக்கொள்ள வேண்டும்...எப்படி வலியை தாங்கி கொண்டீற்கர்கள் என்று கேட்டதற்கு ”வலியை தாண்டி இந்த டாட்டூ போடும்போது எனக்கு ஒரு சந்தோஷம் கிடைத்தது.விஜய் என்னுடைய நண்பர்.. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் போட்டவை நெஞ்சில் குத்தி இருக்கிறோம் என்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் நெஞ்சில் குடியிருக்கும் எங்கள் தலைவா.. என்று விஜய்யின் போட்டோவுக்கு கீழே எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை விஜய் இதை கேள்விப்பட்டு என்னை பார்க்க வர சொன்னால் நான் போய் பார்ப்பேன். இப்போது இருக்கும் இந்த  வலி அவர் கூட நிற்கும்போது தெரியாது. இதை பார்த்தால் அழகாய் இருக்கு எப்படி எங்கே போட்டீங்கன்னு கேட்பாரு.. அதைத் தாண்டி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமானு கேட்பாரு.சும்மா சட்டையில் போட்டு கழட்டிட்டு வேற சட்டை போட்டுக்கறதுக்கு சட்டைல அவரோட உருவத்தை நிறைய பேரு குத்துறாங்க. 

 

அதைத் தாண்டி யூனிக்கா டிஃபரண்டா இருக்கணும்னு நான் நெனச்சேன். அவர் எப்போதும் என்னுடைய ஹார்ட்டோட இருக்கணும்னு நினைக்கிறேன்.அதுபோல முதலில் என்னுடைய மகளோட பெயரை குத்தி இருக்கிறேன். இந்த பக்கம் வீட்டில் அவர்களுடைய பெயரை குத்தி இருக்கிறேன். அப்போ இருந்த சந்தோஷம் வேற... ஆனால் இப்போது பயங்கர சந்தோஷமா இருக்கிறேன்”என்று தாடி பாலாஜி கூறியிருக்கிறார். தாடி பாலாஜியின் இந்த செயல் தவெக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram