”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
மாநகராட்சி கூட்டத்திற்கான அறிவிப்பு ஒரு வாரத்துக்கு முன்பு கொடுக்கப்படவில்லை என சொல்லி திமுக கவுன்சிலர்கள் சிலர் மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்திலேயே வாக்குவாதம் முற்றியதால் மாநகராட்சி கூட்டமே களேபரமாக மாறியது.
தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில் தொடங்கியது. மேயரின் நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் சிலரே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்தநிலையில் மாநகாட்சி கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. அப்போது மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தியை மேயர் பேச சொன்னார். உடனே மாநகராட்சி 12 வது வார்டு திமுக கவுன்சிலர் வெங்கடேஷ் எழுந்து பேச தொடங்கினார். இந்த கூட்டத்திற்கான அறிவிப்பு ஆறு நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை இன்று காலை தான் எங்களுக்கு வந்தது. 21 கவுன்சிலர்கள் அஜந்தாவை வாங்கவில்லை என கூறினார். பின்னர் கவுன்சிலர்கள் கோபமாகி கூட்டத்தில் இருந்து வெளியேறியதால் பத்து நிமிடத்திற்குள் கூட்டம் நிறைவு பெற்றது.