Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!
அண்ணாமலைக்கு ஆதரவாக பேசி தமிழிசை சவுந்திரராஜனை சரமாரியாக பேசி விமர்சித்து வந்த திருச்சி சூர்யாவை மீண்டும் அதிரடியாக தூக்கி வீசியுள்ளது பாஜக..
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் பாஜக தோல்வியடைந்ததை தொடர்ந்து, அண்ணாமலைக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கும் இடையே புகைச்சல் நிலவி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்த சூழலில் அண்ணாமலை ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த திருச்சி சூர்யா, பரட்டை என்று சொன்னால் தமிழிசை அக்காக்கு கோவம் வருது ஆனா அண்ணாமலையின் படத்தை ஆட்டின் கழுத்தில் போட்டு வெட்டிய போது அதற்கு அவர் கண்டனமே தெரிவிக்கவில்லை. எங்கள் தலைவரை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பகிரங்கமாகவே தமிழிசையை சீண்டினார்.
குறிப்பாக ஆந்திரா முதல்வர் பதவியேற்பு விழா மேடையில் அமித்ஷா தன்னிடம் அக்கிரையாகத்தான் பேசினார் என்று தமிழிசை சௌந்தர்ராஜன் சொன்ன நிலையில், திமுக காரவங்க மாதிரி தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்துக்கிறாங்க, அதனால்தான் நேரடியாக அமித்ஷா அவரை கண்டித்தார்.
குறிப்பாக அண்ணாமலையின் வளர்ச்சி தமிழிசைக்கு பிடிக்கவில்லை, இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் அடுக்கினார்.
இந்நிலையில் தான் திருச்சி சூர்யாவை கட்சியிலிருந்து தூக்குவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது பாஜக.
இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவரான சாய் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி எஸ் சூர்யா அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையில் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் தமிழிசையும் அண்ணாமலையும் நேரடியாக சந்தித்து, தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று காட்டிக் கொள்ளும் வகையில் புகைப்படங்கள் வெளியே வந்தாலும் தமிழக பாஜகவில் புகைச்சல் தொடர்ந்து கொண்டே இருப்பது இதன் மூலமாக திட்டவட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.