kallakurichi Kalla Sarayam | சட்டமன்றம் கிடக்கட்டும்.. கள்ளக்குறிச்சிக்கு வண்டிய விடு! விரையும் EPS!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து தற்போது வரை 33 நபர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியாகி வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை இன்றைய தினம் கூடும் நிலையில், சட்டமன்றதிற்கு செல்வதை விட கள்ளக்குரிச்சி செல்வதே முக்கியம் என பாதிக்கபட்ட மக்களை சந்திக்க நேரடியாக கள்ளக்குரிச்சி விரைவதாக தெரிவித்துள்ளார் EPS
கள்ளக்குறிச்சி கருனாபுரம் கிராமத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட விஷ சாராயம் குடித்ததில் 33 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர், பலர் ஆபாத்தான முறையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நிமிடத்திற்கு நிமிடம் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.
இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு
@AIADMKOfficial
சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.
மேலும் இறப்புக்கள் தொடர்ந்து
கொண்டே இருக்கின்றன,
இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!
#Resign_Stalin