Bahujan Samaj state president death | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

Continues below advertisement

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

2006 ஆம் ஆண்டு, சுயேட்சையாக நின்று சென்னை மாமன்ற உறுப்பினரானார்.

 

2007 ஆம் ஆண்டின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டார். 

இந்தநிலையில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வீட்டருகே நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். 

அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். இதையடுத்து மர்ம கும்பல் குறித்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஒரு கட்சியின் மாநில தலைவரே வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram