BSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

Continues below advertisement

பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கொலை வழக்கில், ஆற்காடு பாலு என்பவர் உள்ளிட்ட 8 பேர் போலீசில் சரண்டைந்துள்ளனர்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவர் 52 வயதான ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் அருகிலேயே வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வசித்து வந்தார். அங்கு புதிதாக பெரிய அளவில் வீடு கட்டி வருவதால்,  தற்காலிகமாக அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நாள்தோறும் மாலை நேரங்களில் தனது புதிய வீட்டின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிடுவதோடு,  அங்குள்ள தனது நண்பர்கள் மற்றும் கட்சிக்காரர்களை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.  அந்த வகையில் நேற்று அங்கிருந்த போதுதான், 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கையில் பட்டா கத்தியுடன் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் , படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் ஆற்காடு பாலு என்பவர் உட்பட 8 பேர் அண்ணாநகர் துணை ஆணையர் முன்பு போலீசில் சரணடைந்துள்ளனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆற்காடு சுரேஷின் சகோதரர் இந்த கொலையில் தொடர்பில் இருப்பதால், தனிப்பட்ட பகை காரணமாக து நடந்து இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மாநில தலைநகர் சென்னையில் ஒரு தேசிய கட்சியின் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை குவித்து வருகின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram