Minister T. M. Anbarasan Inspection | போட்டுக்கொடுத்த மாணவர்கள்..LEFT&RIGHT வாங்கிய அமைச்சர்
"பாத்ரூம் கிளீனாவே இல்ல சார்".. என்று சைக்கிள் தரவந்த அமைச்சரிடம் மாணவர்கள் போட்டுக்கொடுக்க... உடனே உஷாராகி தலைமை ஆசிரியை வேட்டையாடு விளையாடு கமலஹாசன் பாணியில் கேட்டை இழுத்து பூட்டி அமைச்சரை தடுக்க நினைத்த சம்பவம் அறங்கேறியுள்ளது...
இந்நிலையில் அதிகாரிகளை அமைச்சர் லெப்ட் & ரைட் வாங்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..
குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார் அமைச்சர் தாமோ அன்பரசன்
அதனைத் தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் விலையில்லா மிதிவண்டியை பெற சென்ற மாணவர்கள் முறையான குடிநீர் வசதி கழிப்பறை வசதி இல்லை சார் என அமைச்சரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பள்ளி தலைமை ஆசிரியை உடனே அவரின் உதவியாளரை அழைத்து கழிப்பறையை பூட்டு போட்டு மூடுமாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை விடாத அமைச்சர் விழா முடிந்ததும் கழிப்பறையை ஆய்வு செய்ய சென்றார். அப்போது கழிப்பறை பூட்டியிருந்தததை கண்டு, ஏன் பூட்டியுள்ளது என கேள்வி எழுப்பினார்.
மேலும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்ன்னு சொல்ற, இதுல பாக்குறது இல்லையா? நீ தான பாக்கனும் என்று அதிகாரிகளை அதட்டினார்.
பின்னர் கழிப்பறையை திறக்கச் சொல்லி ஆய்வு மேற்கொண்டார், அப்போது அதிகாரிகள் சிலர் தூர்நாற்றம் வீசுவதை பொருத்த கொள்ள முடியாமல் மூக்கை மூடிக்கொண்டனர்.
இந்நிலையில் துர்நாற்றம் வீசியவாறு குப்பை குலங்களுடன் காணப்பட்ட கழிப்பறையை இரண்டு நாட்களில் சுத்தம் செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுப்பேன் மீண்டும் வந்து ஆய்வு மேற்கொள்வேன் என எச்சரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் அமைச்சர்.