Subramanian swamy slams Modi : ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

Continues below advertisement

எந்த பிரச்சனைக்கும் மோடி குரல் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பலனை மட்டும் அவர் பெயரில் கைப்பற்ற முயற்சிக்கும் கெட்ட பழக்கம் மோடிக்கு உள்ளது என எம்பி சுப்பிரமணியன் சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசி கூட தெரியாது என பாஜக முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். சர்ச்சைக்களுக்கு பெயர் போன சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் எம்.பியாக இருந்துகொண்டே, அக்கட்சியின் நடவடிக்கைகளையும், எடுக்கும்  முடிவுகளையும் விமர்சிக்கத் தயங்காதவர். அவரின் விமர்சனக் கணைகளுக்கு பிரதமர் மோடியும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி தொடங்கி, ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம், அரசின் வரிக்குறைப்பு நடவடிக்கைகள் என சுப்பிரமணியன் சுவாமி ஆளும் பாஜக அரசுக்கு கொடுக்காத ஆலோசனைகளே இல்லை.

 

இந்தநிலையில் 25 ஜூன் 1975 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட எமர்ஜென்சியின் 50 வது ஆண்டு நிறைவை குறிப்பிட்டு பிரதமர் மீது  சுப்பிரமணியன் சுவாமி புதிய குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.

 

இதுக்குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் வளைதளபக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, எமர்ஜென்சிக்கு எதிராகப் போராடுவதில் மோடி எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. அவர் குஜராத்தில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தார்.பாபுபாய் தலைமையிலான ஜனதா மோர்ச்சாவின் குஜராத் அரசு காரணமாக அவர் எமர்ஜென்சி குறித்து வாய்திறக்கவில்லை. எந்த பிரச்சனைக்கும் மோடி குரல் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பலனை மட்டும் அவர் பெயரில் கைப்பற்ற முயற்சிக்கும் கெட்ட பழக்கம் மோடிக்கு உள்ளது என எம்பி சுப்பிரமணியன் சுவாமி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram