SU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றோடு மாநாடு நிறைவு பெறும் நிலையில் மாநாட்டில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டார் மூன்று நாட்களாக தொடர் மாநாட்டு பணிகளுக்கு ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், ஆறு மணி நேரம் மருத்துவர் கண்காணிக்கப்பில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Su Venketesan MP CPIM | Villupuram CPIM Maanadu