Tamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாரா
பாஜக மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்படப்போகிறார், தமிழிசை மீண்டும் மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்போகிறார் என்ற பேச்சுக்கள் கமலாலய வட்டாரத்தில் கச்சைக் கட்டி பறந்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழிசை வேறு ஒரு பெரிய பதவியை பிடிக்க தூண்டில் போட்டுவருவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து அவரது அதிரடியான நடவடிக்கைகள், திமுக அமைச்சர்களுக்கு எதிராக புள்ளி விவரத்தோடு அவர் வைத்த பிரஸ்மீட்கள், அவரது பாத யாத்திரை உள்ளிட்ட அவரது செயல்பாடுகளால் பாஜகவிற்கு முன்னர் எப்போதும் இல்லாத பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக நம்பும் தேசிய தலைமை. 2026ஆம் தேதி ஆண்டு தேர்தல் வரையில் அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வதே சரியான நிலைபாடாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜனுடைய அரசியல் எதிர்காலம் என்ன ? அவருக்கு என்னவிதமான பதவியை பாஜக தரப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அண்ணாமலை மாற்றப்பட்டு மீண்டும் தமிழிசையை மாநிலத் தலைவராக பாஜக தேசிய தலைமை அறிவிக்கப்போகிறது என்ற தகவல்கள் எல்லாம் பரவும் நிலையில், பாஜக தேசிய தலைவரான ஜேபி நட்டாவை டெல்லிக்கே சென்று சந்தித்து இருக்கிறார் தமிழிசை. பாஜக தலைவர் பதவிக்காக அவர் காய்நகர்த்தி வருகிறார் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கும்போது அவர் வேறு ஒரு பெரிய பதவியை பிடிக்க தூண்டில் போட்டுவருவதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
பாஜக தேசிய தலைவரை சந்தித்த கையோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்திக்கவிருக்கும் தமிழிசை தனக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்து தேர்தலையும் சந்தித்து வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் தனக்கு அங்கீகாரம் இருகக் வேண்டுமென்றால் தன்னை மாநிலங்களவை உறுப்பினராக்கி, கேபினட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சர் பொறுப்பை தனக்கு தர வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் பாஜக தேசிய தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவரது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்க்கும் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.