”டேய்.. எ** நாய்களா” AM சௌத்ரி அநாகரீகம் பரிதாபங்கள் சேனல் மீது புகார் | Gopi Sudhakar | Paridhabangal | Society Paavangal Issue
சாதிய ஆணவக் கொலையைத் கண்டித்து பகடி செய்யும் விதமாக வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் யூடியுப் சேனல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பரிதாபங்கள் கோபி, சுதாகருக்கு ஏ.எம்.சௌத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் நடந்த கவின் குமார் ஆணவக்கொலையைத் தொடர்ந்து பரிதாபங்கள் யூடியுப் சேனலில் சொசைட்டி பரிதாபங்கள் என்கிற வீடியோ வெளியானது. சுய சாதி பெருமை பேசுபவர்களை பகடி செய்யும் விதமாக இந்த வீடியோ இருந்தது. பலர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கோபி சுதாகரை பாராட்டினர். முன்னணி நடிகர்களே பேச துணியாததை தங்கள் வீடியோவில் கோபி சுதாகர் பேசியது பாராட்டிற்குரியது. மொளகா பொடியை எடுத்து முஞ்சில அடிச்சு முதுகுல குத்தியிருக்கு மூதேவி, இதுக்கு வீரம்னு பில்டப் வேற என்று கோபியின் வார்த்தைகள் கைதட்டல்களை பெற்றது. பெரும்பாலான மக்களின் மன எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றியதுதான் இந்த வீடியோ இரண்டே நாட்களில் 41 லட்சம் பார்வையாளர்களை சென்றதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது
அதே நேரம் இந்த வீடியோவை சாதி ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்தும் வருகிறார். திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எம் செளதரி கோபி சுதாகர் வீடியோவை கண்டித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் கோயம்புத்தூரில் தனுஷ்கோடி என்கிற வழக்கறிஞ்சர் கோபி சுதாகர் யூடியுப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.