Selvaperunthagai | ’’திமுக நிழலில் காங்கிரஸ்?’’என்ன பேசினார் செ.பெருந்தகை?
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 40/40 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பறைசாற்றிய நிலையில், தமிழகத்தில் இனியும் மற்றவர்களை சார்ந்தே
அரசியல் செய்ய வேண்டுமா என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸின் பலத்த கூட்டணியில் ஒன்றாக பார்க்கப்படுகிறது திமுக. இந்த மக்களவை தேர்தலிலும் தமிழநாட்டில் ஐஎண்டிஐஏ கூட்டணியில் உள்ள திமுக 40 க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளிலும் காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு இடையேயான உறவு பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநிலத்தலைவராக செல்வப்பெருந்தக்கை நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழகத்தில் இனியும் மற்றவர்களை சார்ந்தே அரசியல் செய்ய வேண்டுமா என கட்சி நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.. அப்போது பேசிய அவர்,
சார்பு அரசியல் குறித்து கருத்து கூறுமாறு கட்சியினரிடம் செலவப்பெருந்தகை கேட்டுள்ளார்.தோழமை என்பது வேறு இன்னும் எத்தனை நாள் தான் சார்ந்து இருப்பது..
தமிழகத்தில் சுயமாக இருக்கப்போகிறோமா?
இனியும் மற்றவர்களை சார்ந்தே அரசியல் செய்ய போகிறோமா? என அவர் பேசியுள்ளார்.
திமுக கூட்டணி பற்றிதான் செல்வப்பெருந்தகை இவ்வாறு பேசியுள்ளதாக அர்சியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, ஒருவேளை 2026 தேர்தல் குறித்து தான் செல்வப்பெருந்தகை இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? 2026 தேர்தலை காங்கிரஸ் தனித்து எதிர்கொள்ள போகிறதா என்கிற கேள்விகளுக்கான விடை பொறுத்திருந்து காணலாம்