Senji Masthan Vs Ponmudi | செஞ்சி மஸ்தானுக்கு கல்தா! பொன்முடி HAPPY அண்ணாச்சி! அலறவிட்ட ஸ்டாலின்!

Continues below advertisement

பொன்முடியோடு தொடர் மோதல் போக்கு, விழுப்புரம் திமுகவில் இருந்து தலைமைக்கு சென்ற ரிப்போர்ட்டுக்கு மத்தியில் செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக திண்டிவனம் ப.சேகர் வடக்கு மாவட்ட பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு இரண்டு திமுக மாவட்ட செயலாளர்கள் இருந்த நிலையில், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ-வாகவும் இருந்த புகழேந்தி சில நாட்களுக்கு முன்னர் காலமானார். இதுவரை புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாததால் அமைச்சர் பொன்முடியே தெற்கு மாவட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் இருந்தார்.

தெற்கு மாவட்டத்திற்குள் செல்வாக்கை செலுத்த அமைச்சர் மஸ்தானும் ஒட்டுமொத்த விழுப்புரத்திலும் செல்வாக்கோடு இருக்க அமைச்சர் பொன்முடியும் தொடர்ந்து முயற்சித்து வரும் சூழலில் இருவர் ஆதரவாளர்களிடையே அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரண்டு மாவட்டத்திலும் பேனர்கள் வைப்பதில் இருவர் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது. 

கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கியது திமுகவினர் மத்தியிலேயே பரபரப்பாக பேசப்பட்டது. 

இதுமட்டுமல்லாமல் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக கள்ளச்சாராயம் புகாரும் எழுந்தது திமுகவினருக்கு சிக்கலை கொடுத்தது. விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினரின் ஆதிக்கம் தான் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், மகன் மற்றும் மருமகனின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டன. அதற்கான சாம்பிள் தான், திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் என்றும் பார்க்காமல் “இது என்ன உங்க குடும்ப கட்சியா என்று ஒருவரும் பொருளே இல்லை எனக்கு எதற்கு பொருளாளர் பதவி என்று இன்னோருவர் என சரமாரியாக ரவுண்டு கட்டி கேள்வி எழுப்பினர் கவுன்சிலர்கள், பதில் சொல்ல முடியாமல் திணறிய மஸ்தான் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக்கொண்டு புறப்பட்டார்.

கட்சிக்காரர்கள் என்று பொதுவாக பார்க்காமல் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே செஞ்சி மஸ்தான் பதவிகள் கொடுப்பது, டெண்டர் ஒதுக்குவது என ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் புகார் சொல்கின்றனர் சிலர். மக்களவை தேர்தல் சமயத்திலும் அதிமுகவுக்கு ஆதரவாக செஞ்சி மஸ்தான் வேலை பார்த்ததாக விழுப்புரம் வட்டாரத்தில் இருந்து திமுக தலைமைக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி கேஎஸ் மஸ்தான் அவர்களை அப் பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர்ஸ் சேகர் என்பவரை விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். செஞ்சி மஸ்தான் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருவதால் திமுக தலைமை இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள சேகரும் பொன்முடியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram