Sellur Raju about Rahul : ”அண்ணே டெலிட் பண்ணிட்டேன்” PHONE போட்ட எடப்பாடி! பதுங்கிய செல்லூர் ராஜூ!

Continues below advertisement

ராகுல் காந்தியை புகழ்ந்து எக்ஸ் வளைதள பக்கத்தில்  தான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் என குறிப்பிட்டு பதிவிட்ட வீடியோ பெரும் சர்ச்சயை ஏற்படுத்திய நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  அந்த பதிவை நீக்கியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுவாகவே அரசியல் குறித்து அவர் கூறக்கூடிய அனைத்து விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் டெரண்டாவது வழக்கமான ஒரு விஷயம்.

அந்த வகையில் செல்லூர் ராஜு போட்ட பதிவு ஒன்று அதிமுகவில் புயலை கிளப்பியது. நான் பார்த்த நெகிழ்ந்த ரசித்த இளம் தலைவர் என்று பதிவிட்டு அதற்கு கீழே ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை  பதிவு செய்துள்ளார் செல்லூர் ராஜு. மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என அதிமுக தெரிவிக்காமல் பிரசாரம் செய்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜூ பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும் அரசியல் விமர்சகர்கள் சிலர் செல்லூர் ராஜுவின் பதிவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியை அதிமுக ஆதரிக்கிறதா எனக் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செல்லூர் ராஜுவை தொடர்பு கொண்டு கேட்ட போது எளிமையாக அனைத்து மக்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை ரசித்து பார்த்தேன் . ஒரு முன்னாள் பிரதமரின் மகன் எளிமையாக  ஒரு ஓட்டலில் யாருக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி உணவருந்தியது ஆச்சிரியாமாக இருந்தது அதனால் தான் பதிவிட்டேன் என செல்லூர் ராஜூ விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் அதிமுகவிற்கும் உங்களுக்கு எதோ பிளவோ என்று நினைத்தோம் என கேக்க அதிமுகவே நாங்க தான் என செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

செல்லூர்ராஜுவின் இந்த பதிவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அண்ணனுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவை செல்லூர்ராஜுவின் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பதிவை நீக்கினார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram