Chennai News : மாமுல் கேட்ட அதிகாரி? கண்ணீருடன் வியாபாரி பாயுமா நடவடிக்கை?
மாமுல் கேட்ட அதிகாரி? கண்ணீருடன் வியாபாரி பாயுமா நடவடிக்கை?
கூடுவாஞ்சேரி அருகே இளநீர் வியாபாரியிடம் தினம்தோறும் 150 ரூபாய் தர வேண்டும் என்று நகராட்சி ஊழியர்கள் மாமூல் கேட்பதாக இளநீர் வியாபாரி கண்ணீர் மல்க வீடியோ வெளியீட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஆனந்தன்.
இந்த நிலையில் அவர் கரும்பு சக்கைகளை தேசிய நெடுஞ்சாலை ஓரம் ஏறித்துள்ளார் இதன் காரணமாக கூடுவாஞ்சேரி நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உத்தரவின் பேரில் மேற்பார்வையாளர் ஐயப்பன் இளநீர் வியாபாரி ஆனந்தன் அவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
மேலும் தினம்தோறும் நகராட்சிக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் இந்த 2000 அபராதத்தை நாளைக்குள் செலுத்தவில்லை என்றால் சாலையில் இனிமேல் நீ கடை போட முடியாது என்றும் ஒருமையில் பேசி மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது..
அதேபோல தினம்தோறும் 150 ரூபாய் மாமுல் கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும் என மேற்பார்வையாளர் ஐயப்பன் கூறியதாக இளநீர் வியாபாரி ஆனந்தன் அவர்கள் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தக் காட்சி தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது... இந்த நிலையில் மாமுல் கேட்ட நகராட்சி ஊழியரை உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நாம் நகராட்சி ஊழியரை தொடர்பு கொண்ட போது அவர் தொலைபேசியை எடுக்கவில்லை.......