Seeman Vs Vijayalakshmi : ”திமுகவை சீண்டாதே! என் பாவத்தை கொட்டிக்காத!” சீமானை விளாசும் விஜயலட்சுமி!

விஜயலட்சுமியை தனக்கு எதிராக தூண்டிவிட்டது திமுக என சீமான் பேசிய நிலையில், என்னைய பத்தி பேசாதனு சொல்லியும் நீ என்னைய பத்தி எதுக்கு பேசற நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. 2026 லயும் பிச்சை தான் எடுக்க போற என்று விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டு சீமானை வெளுத்து வாங்கியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, காளியம்மாளை விமர்சித்துப் பேசியதாக வெளியான ஆடியோ குறித்தும்,போலீஸ் அதிகாரிகள் குறித்து கொச்சைப்படுத்தி ஒருமையில் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் திமுகவையும் கருணாநிதியையும் விமர்சித்து இரண்டு முறை பாடலை சீமான் பாடியுள்ளார்..பின்பு பெங்களூர்காரியை வைத்து  திமுக என்னென்னமோ செய்து பார்த்தார்கல் என நடிகை விஜயலட்சுமி குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார்

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தன்னை பற்றி சீமான் பேசியதால் உடனே விஜயலட்சுமி புதிய வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சீமானை ஒருமையில் மிக மோசமான வார்த்தைகளால் விஜயலட்சுமி விமர்சித்திருக்கிறார். மேலும் என்னையும் திமுகவையும் கருணாநிதியையும் இழிவுபடுத்தி பேசுவதைத் தவிர உனக்கு வேறு அரசியலே தெரியாதா? என விஜயலட்சுமி கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola