RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?
எடப்பாடி பழனிசாமி - சீமான் ஆகியோர், பாஜக உடன் திமுக சீக்ரட் உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி வரும் நிலையில், டெல்லிக்கு விசிட் அடித்திருக்கும் ஆளுநர் ரவியிடம் திமுகவுடன் சுமூக போக்குடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் ரவியின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அவர் டெல்லியில் முகாமிட்டு வருகிறார். அவர் பொறுப்பேற்றதில் இருந்தே ஆளும் திமுக அரசிற்கு கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வந்தார்.
ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆளுநர் ரவி சார்பில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அமைச்சர்களுடன் இணைந்து தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து ரவியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஸ்டாலின் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கு எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இந்த நிகழ்விற்கு பிறகு திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுவதை ரவி நிறுத்தினார் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில் ராஜ்நாத், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அண்ணாமலையும் திமுக எதிராக தீவிரமாக கருத்துக்களை முன்வைப்பதை நிறுத்தினார். DMK பைல்ஸ் என்று திமுக ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து அண்ணாமலை இரண்டு முறை அறிக்கைகளை வெளியிட்டார்.
ஆனால் மூன்றாவது முறையாக திமுக பைல்ஸை வெளியிடவில்லை. டெல்லி பாஜகவின் உத்தரவின் பேரில் தான் அவர் வெளியிடவில்லை என்ற தகவல் வெளியானது. இச்சூழலில் தான் திமுக பாஜகவுடன் ரகசிய உறவில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடந்த முறை நடைபெற்ற சட்ட மன்ற கூட்டத்தொடரில் திராவிட மாடல், பெரியார் உள்ளிட்ட வார்த்தைகள் ஆளுநர் ரவி பேச மறுத்த சம்பம் தமிழ் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக இது பாஜகவிற்கு எதிராக மாறியாது.
இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் ரவி டெல்லியில் முகாமிட்டுருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசியும் இருக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடரில் திமுக அரசுக்கு எதிராக எதுவும் பேசக்கூடது என்றும் திமுக வுடன் சுமூக உறவில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆளுநர் ரவிக்கு ஆர்டர் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.