Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

Continues below advertisement

உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறை, சாப்ட்வேர் துறை ஆகியவற்றில் சென்னை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கூகுள் மற்றும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் சி.இ.ஓ-வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். அந்த வகையில் சென்னையை சேர்ந்த அமெரிக்கா தொழிலதிபரான, ஸ்ரீராம் கிருஷ்ணன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பி.டெக் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். படிப்பு முடிந்த சில நாட்களிலே அமெரிக்கா சென்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தனது 21 வயதிலேயே பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து யாகூ, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். இது மட்டும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களான சேட் ஜி.பி.டி, ஓபன் ஏ.ஐ. உள்ளிட்ட தளங்களிலும் பணியாற்றினார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க வாங்கிய பிறகு அதன் பெயரை X வலைதளமாக மாற்றினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் மறுசீரமைப்பு பணியை மேற்கொண்ட போது, அந்த பொறுப்பு ஸ்ரீராம் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அமெரிக்கா தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. புதிதாக அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் ஏ.ஐ தொழில் நுட்பத்தில் தனிக் கவனம் செலுத்த உள்ளாராம். ஏ.ஐ. தொழில்நுட்பம் தற்போது உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி அடைந்ததிலிருந்து, உலகம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் செயற்கை தொழில்நுட்பத்தை கையாளுவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து டிரம்ப் அடுத்த மாதம் 20ஆம் தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். முன்னதாக பல்வேறு துறை ரீதியான ஆலோசனை வழங்கும் அதிகாரிகளை டிரம்ப் நியமித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஏ.ஜ., தொழில்நுட்பத்தின் மூத்த அரசு ஆலோசகராக சென்னை சேர்ந்து ஸ்ரீராம் நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இதில் அதிக அனுபவம் உள்ள நபர்க ஆலோசர்களாக வேண்டும் என்பதால், ஸ்ரீராம் கிருஷ்ணன் தற்போது ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram