Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!

Continues below advertisement

அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்களுடன் இணைந்து அரசுக்கு சொந்தமான 411 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் பகீரை கிளப்பியுள்ளது.

திமுக ஆட்சியில், பால் வளத்துறை மற்றும் கதர் வாரிய கிராமத் தொழில்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன், தன்னுடைய அதிகாரத்தை பயண்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பல்வேறு ஆதாரங்களுடன் கூடிய புகாரை அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறை,  முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, வருவாய் துறை அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன்கள் பிரபு ,திவாகர் மற்றும் திலீப் குமார் ஆகியோர் டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிறுவனம், ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவிற்கும் நங்கநல்லூர் மெட்ரோவிற்கு இடையே பரங்கிமலை பகுதியில் BSNL அலுவலகத்திற்கு அருகில் உள்ள 4.75 ஏக்கர் அளவிலான அரசுக்கு சொந்தமான நிலைத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.

ஏற்கனவே 2015ம் ஆண்டு இந்த நிலத்தின் சர்வே எண்கள் 1353, 1352 அரசின் நிலம், இதை பத்திரபதிவு செய்யக்கூடாது, ஏற்கனவே பத்திரபதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கடித்தம் அனுப்பியுள்ளார். ஆனால் அதை மதிக்காத இந்த நிறுவனம், தொடர்ந்து 1991 முதல் 2018 வரை பல பத்திரபதிவுகளை செய்துள்ளது. இந்த டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பக்குதாரர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் இருக்கும் சூழலில் தன்னுடைய அதிகாரத்தை பயண்படுத்தி, நிலத்தை மீண்டும் அரசு மீட்க முடியாத வகையில் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தடுப்பதாக அறப்போர் இயக்கம் குற்றசாற்றை முன்வைத்துள்ளது.


இந்நிலையில் இது அரசுக்கு சொந்தமான நிலம் தான் என்பதற்கான வருவாய்த்துறை பதிவேடு நகல், மேலும் 4.52 ஏக்கர் அளவிற்கு பத்திரபதிவு செய்ததற்கான ஆதாரங்கள் என கிட்ட தட்ட 5 ஏக்கர் நிலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் குடும்பம் ஆக்கிரமித்து வைத்துள்ளதை முதலமைச்சர் முதல் சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் வரை அனைவரின் பார்வைக்கும் எடுத்து சென்றுள்ளது அறப்போர் இயக்கம்.

இன்றைய சந்தை மதிப்பின் படி 411 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை மீட்டு, இத்தனை நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் உட்பட இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்மையில் அமைச்சரவை மாற்றத்தின் போது, இலாக்கா மாற்றபட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு முதல்வர் ஸ்டாலின் அலுவலகம் வரை சென்றுள்ள நிலையில், என்ன ஆக்‌ஷன் எடுக்கப்போகிறார் ஸ்டாலின் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram