Ramanathapuram DMK Issue | அமைச்சரா? MLA-ஆ?அடித்துக் கொண்ட ஆதரவாளர்கள் திணறிய POLICE
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் பார்த்திபனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவாளர்களுக்கும், மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே முந்தி செல்வதில் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர். சம்பவ இடத்திலிருந்து போலீசார் இரு தரப்பையும் விலக்கி விட்டனர். அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டாலும் விழா மேடையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சிரித்து பேசிக் கொண்டனர்.