Rahul Gandhi speech On wayanad : தங்கச்சிய பார்த்துக்கோங்க! அப்பா இறந்த பிறகு...” ராகுல் EMOTIONAL

Continues below advertisement

ஒரு அண்ணனா சொல்கிறேன்…என் தங்கை பிரியங்காவை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என வயநாடு மக்களிடம் ராகுல் காந்தி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து ரேபரேலி தொகுதியை தக்கவைத்துக்கொண்டு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார் ராகுல். இந்நிலையில் வரும் நவம்பர் 13 வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாட்டில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். 
இன்று பிரியங்கா காந்தி வயநாடு தேர்தலுக்காக மனுதாக்கல் செய்தார்.பிரியங்காவுடன் ராகுல், சோனியா காந்தி, பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா, மகன் ரைஹான் ராஜிவ் வத்ரா ஆகியோரும் வருகை தந்தனர். இந்நிலையில் வயநாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,வயநாடு எனக்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தியாவிலேயே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரே தொகுதி வயநாடு தான். ஒன்று என் தங்கை அதிகாரப்பூர்வ எம்பி..மற்றொன்று நான்! வயநாட்டின் நலனுக்காக நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

எங்கள் இளமை பருவத்தில், பிரியங்கா தனது நண்பர்களிடம் நெருங்கி பழகுவார். அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் அளவுக்கு அன்பு கொண்டிருந்தார். என் தந்தை இறந்த போது என் தங்கைக்கு வெறும் 17 வயது. அவர்தான் என் தாய் சோனியாவை பார்த்துக்கொண்டார். இனி நீங்களும் அவரது குடும்பத்தினர் தான். என் தங்கை அவளது குடும்பத்தினருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாள் என என்னால் உறுதியாக சொல்லமுடியும்.

என் கையில் உள்ள இந்த ராக்கி என் தங்கை பிரியங்கா கட்டியது. அதுவாக அறுந்து விழும் வரை அதை நான் அவிழ்க்கமாட்டேன். ஒரு சகோதரனா சொல்கிறேன்…எனது தங்கையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.. உங்கள் அனைவரையும் உங்கள் பிரச்சனைகளையும் இனி அவர் பார்த்துக்கொள்வார்….என பிரியங்கா குறித்து அண்ணன் ராகுல் நெகிழ்ச்சிபட பேசியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram