Rahul Gandhi | மோடிக்கு ஆப்புவைத்த INDIA! காலரை தூக்கும் ராகுல்..இடைத்தேர்தல் படுதோல்வி

Continues below advertisement

நாடு முழுவதும் 13 தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 11 இடங்களில் முன்னிலை வகித்து அதிரடி காட்டி வருகிறது இந்தியா கூட்டணி. அதுவும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி சென்றுள்ளது.

13 தொகுதிகளில் சட்டசபை இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள், ஹிமாச்சல பிரதேசத்தில் 3 தொகுதிகள், உத்தரகாண்டில் 2 தொகுதிகள், மத்தியபிரதேசம், பீகார், பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு தொகுதிகள் என 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. பஞ்சாபில் உள்ள ஒரு தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரகாண்டில் உள்ள 2 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவது பாஜகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டின் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்துள்ளார். பீகாரில் உள்ள ஒரு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது சுயேட்சை வேட்பாளரான சங்கர் சிங் அக்கட்சியை பின்னுக்கு தள்ளி முன்னிலைக்கு வந்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 3 தொகுதிகளில் 2ல் காங்கிரஸும், ஒன்றில் பாஜகவும் முன்னிலையில் உள்ளன.

13 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக முன்னிலையில் இருப்பது எதிர்க்கட்சியினரின் விமர்சன வலையில் சிக்கியுள்ளது. ஏற்கனவே மத்தியில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளதாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதாவது மொத்தம் 7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 5 மாநிலங்களில் வெற்றியை வசமாக்கியுள்ளது. இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி முன்னிலை காட்டி வருவதை காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram