Duraimurugan Hospitalized | திடீரென சரிந்த துரைமுருகன்! பதறிய ஸ்டாலின்..அறிவாலயத்தில் திக் திக்!

Continues below advertisement

அண்ணா அறிவாலயத்திற்கு வந்த துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அங்கே பதட்டமான சூழல் உருவானது.. இந்நிலையில் மருத்துவர் எழிலன் அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியதாகவும், தற்போது கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றதை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குவிந்தனர், அங்கே பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் விக்கிரவாண்டி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொல்வதற்காக கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். 

அப்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கே பதட்டமான சூழல் உருவானது. உடனடியாக திமுக எம்எல்ஏவும் மருத்துவமான எழிலன் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலுதவி கொடுத்துள்ளார். அதனை அடுத்து வழக்கமாக அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினின் கார் எந்த இடத்தில் நிப்பாட்டப்படுமோ, அந்த இடத்திற்கு அவசர அவசரமாக துரைமுருகனின் லெக்சஸ் கார் கொண்டுவரப்பட்டது. 

அண்ணா அறிவாலயத்தின் வாயிலின் உள்ளேயே நுழைந்த அவருடைய காரில், உடனடியாக துரைமுருகனை ஏற்றி மற்ற அமைச்சர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விரைவில் மருத்துவமனை தரப்பிலிருந்து துரைமுருகனுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram