Rahul Gandhi on Budget 2024 | மத்திய பட்ஜெட் 2024 -25’’குஷியில் அதானி, அம்பானி’’ ராகுல் விமர்சனம்

Continues below advertisement

பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் பட்ஜெட் இது என மத்திய பட்ஜெட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதில் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கு மேற்கோளிட்டு தெரிவித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. 

மக்களவை தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.
அந்த வகையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவு மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கு தேவைப்படுகிறது. எனவே, கூட்டணி கட்சிகளை சந்தோஷப்படுத்த அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் பட்ஜெட் இது. மற்ற மாநிலங்களின் பணத்தில் பாஜக தனது கூட்டணி மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதியை கொடுத்துள்ளது. சாதாரண குடிமக்களுக்கு பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, கூட்டாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகள் Copy, Paste செய்யப்பட்டுள்ளன” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram