Rahul Gandhi Ambani : ”SORRY மிஸ்டர் அம்பானி” அழைப்பை ஏற்காத ராகுல்! காலர் தூக்கும் காங்கிரஸ்
அம்பானி வீட்டு திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், நேரில் சென்று முகேஷ் அம்பானி அழைப்பு விடுத்தும், ராகுல் காந்தி அதைத் தவிர்த்து விட்டார். இந்நிலையில் நாட்டில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அம்பானி வீட்டு திருமண நிகழ்வில் இருந்தபோது, டெல்லியில் ஒரு பீட்சா கடையில் ஒரு பீட்சாவை ஆர்டர் செய்துவிட்டு அதற்காக காத்திருந்த ராகுல் காந்தியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது..
இந்தியாவே இதுவரை இப்படி ஒரு திருமணத்தை பார்த்ததில்லை என்னும் அளவில், உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, ஷாருக்கான், அமிதாப், ரஜினிகாந்த், தோனி என இந்தியாவின் நட்சத்திரங்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்றனர். அவ்வளவு ஏன் அம்பானி அதானி வளர்ச்சிக்காக தான் பாஜக அரசு பாடுபடுகிறது என குற்றச்சாட்டை முன்வைத்த திமுக தரப்பில் கூட உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
ஆனால் டெல்லி ஜன்பாத்தில் உள்ள ராகுல் காந்தி இல்லத்திற்கு நேரடியாக சென்று முகேஷ் அம்பானி, தன்னுடைய மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார். இருந்தும் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை திட்டமிட்டே தவிர்த்து உள்ளார் ராகுல்.
இதன் பின்னணியில் தெளிவாக ஒரு அரசியல் கருத்தை பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி "அதுதான் பிரதமர் மோடி உட்பட அனைத்து இந்திய பிரபலங்களும், அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்பதையே பெருமையாக கருதினர். ஆனால் ராகுல் காந்தியோ அங்கு செல்வதை தவிர்த்து விட்டு, மணிப்பூர் அசாம் போன்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று களத்தில் மக்களுடன் மக்களாக நிற்கிறார்"
இதைதான் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய பிரியங்கா காந்தி "மீடியாக்களையும் அரசியல்வாதிகளையும் அம்பானி, அதானிகள் வாங்கியிருக்கலாம் ஆனால் அவர்களால் எப்போதும் என்னுடைய சகோதரர் ராகுலை விலைக்கு வாங்க முடியாது" என்று சொன்னதை குறிப்பிட்டு தற்போது காங்கிரஸ் கட்சியினர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ஒட்டுமொத்த இந்தியாவின் முக்கிய பிரமுகர்களும் அம்பானியின் திருமண நிகழ்வுகள் பங்கேற்றிருந்தபோது, அதையெல்லாம் தவிர்த்து விட்டு டெல்லியில் உள்ள ஒரு பீட்சா கடையில், பீட்சா வை ஆர்டர் செய்துவிட்டு ராகுல் காந்தி காத்திருந்ததாக, ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் அடிபணி பவர் ராகுல் காந்தி இல்லை என காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அதே நேரம் சோனியா காந்தி தரப்பில் ஆனந்த அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் தம்பதியினருக்கு வாழ்த்து மடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.