Armstrong Wife Appeal For CBI : ’’போலீஸ் வேணாம்; CBI தான் வேணும்’’களத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி

Continues below advertisement

ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டின் முன் 8 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்க்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..


அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது 11 பேரையும் காவலில் எடுத்த செம்பியம் போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதில் ஒருவர் தான் ரவுடி திருவெங்கடம். இவருக்கு ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளரான தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடையதாக சொல்லபடுகிறது. 

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையின் போது, நாட்டு வெடிக்குண்டு, பயங்கரமான ஆயுதங்களுடன் ஒரு பை சம்பவ இடத்தில் கண்டறியப்பட்டது.

அது குறித்து விசாரனை செய்த போலீஸ், ஆயுதங்கள் எங்கே பதுக்கி வைக்கபட்டிருந்தது என்று விசாரித்த போது, மாதவரத்தில் தாங்கள் திட்டம் தீட்டியதையும், ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தையும் ஒப்புகொண்டார் திருவெங்கடம்.

அதன் அடிப்படையில் அவரை அழைத்துக்கொண்டு மாதவரம் பகுதிக்கு வந்த காவல்துறையினர், பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்து காட்டும் படி தெரிவித்த போது, ஆயுதங்களை கையில் எடுத்த திருவெங்கடம், காவல்துறையினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றதாகவும், அதனால் தப்பி செல்ல முயன்ற திருவெங்கடத்தை எண்கவுண்டர் முறையில் காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் காவல்துறை தரப்பில் தெறிவிக்கபட்டது.

தானே காவல் நிலையத்தில் வந்து சரெண்டரான ஒரு நபர் ஏன் தப்பி செல்ல முயல வேண்டும், ஏதோ ஒரு சம்பவத்தை மூடி மறைக்க தான் காவல்துறை, திருவெங்கடத்தை காவல் துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தற்போது எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து விமர்சித்து வருகின்றன.

இத்தகை சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆளுநரை சந்தித்து கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனினும் ஆளுநர் ஐந்து நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளதால், தற்போது வரை ஆளுநரை மாளிகை தரப்பில் நேரம் ஒதுக்கவில்லை என்று சொல்லபடுகிறது.

இந்நிலையில் தற்போது வரை அரசியல் கட்சிகள் சார்பில் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தபட்டு வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் தற்போது இதை வளியுறுத்த உள்ளதாக வரும் தகவல் பரபரப்பை கூட்டியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram