Tamilisai : 'ஒன்றியம்' என கூறி பதவி பிரமாணம் செய்து கொண்ட பாஜக அமைச்சர்கள்..

Continues below advertisement

முதலில் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் பதவியேற்றார். தொடர்ந்து என்.ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவை சேர்ந்த சாய்சரவணக்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அனைவருக்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை தமிழ்மொழியில் செய்து வைத்தார். ஒன்றியம் எனச்சொல்லி பதவியேற்பு முதலில் ஆளுநர் வாசிக்க அமைச்சர்கள் பதவியேற்றனர். கடவுள் பெயரால் உறுதி மொழி ஏற்றனர். அப்போது, "இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில் கடமையாற்றுவேன்" என்று ஆளுநர் தெரிவிக்க, அதை பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் என்று கூறி பதவியேற்றனர். குறிப்பாக, " இந்திய ஒன்றியம்" என்று ஆளுநர் கூற அதை பதவியேற்ற அமைச்சர்களும் திருப்பிக்கூறினர். வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram