ABP News

PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTR

Continues below advertisement


’’தமிழ்நாட்டில் ஏன் மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறீர்கள் உங்களிடம் இந்தி கற்பிக்க தகுதிபெற்ற ஆசிரியர்கள் இல்லையா? இல்ல தேர்தல் அரசியல் செய்ய பார்க்கிறீர்களா?’’ என பிரபல ஊடகவியலாளர் ராஜ்தீப் தேசாய் அமைச்சர் பிடிஆரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், வரலாறு தெரியாம பேசக்கூடாது..எங்களை விட சிறந்த ஒரு வட மாநிலத்தை காட்டுங்க பாப்போம்..என புள்ளி விவரங்களை அடுக்கி ஓபன் சவால் விடுத்து மாஸ் காட்டியுள்ளார் பிடிஆர்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனியார் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தொகுப்பாளர் மற்றும் பிரபல ஊடகவியலாளருமான ராஜ்தீப் தேசாய்க்கும் பிடிஆருக்கு காரசார வாக்குவாதம் நடந்துள்ளது. அந்த பேட்டியில் மும்மொழிக்கொள்கை மற்றும் தொகுதிமறுவரையறை குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது,  தமிழ்நாடு அரசு மும்மொழிக்கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றை அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்தி மத்திய அரசுக்கு திமுக அரசியல் செய்வதாகவும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்தே இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்? என ராஜ்தீப் தேசாய் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த பிடிஆர், முதலில் மொழி பற்றிய பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்கவில்லை. அதை ஆரம்பித்தது மத்திய அரசு தான். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை கொடுக்காமல் மறுத்து இந்த பிரச்சனைக்கு தொடக்கப்புள்ளி வைத்தார். நாங்கள் இதில் எதுவும் செய்யவில்லை

அடுத்ததாக தொகுதி மறுவரையறை குறித்த அச்சம் வெகுநாட்களாகவே எங்களுக்கு உள்ளது. தற்போது 2026 ஆம் ஆண்டு நெருங்கவே நாங்கள் அது தொடர்பான முன்னெடுப்புகளை உத்வேகப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது அவ்வளவுதான் என கூலாக பதிலளித்தார்.

பின்னர், கல்வி அமைச்சர் தான் 2020 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கையில் தமிழ், இந்தி, ஒடியா, பஞ்சாபி போன்ற அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. தமிழையோ தமிழர்களையோ நாங்கள் ஒடுக்கவில்லை ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் தான் இதை வைத்து அரசியல் செய்கின்றனர் என கூறுகிறாரே... என தேசாய் கேட்க,சூடான பிடிஆர் ‘’வரலாற்றை புரட்டிப்பாருங்கள். சுதந்திரத்திற்கு பிறகு தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்படுவது இது முதல்முறை அல்ல,மூன்றாவது முறை. முதலில் 1968, 1986 மற்றும் 2020..1968 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட மும்மொழிக்கொள்கையில் இந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் இந்தி பேசாத மாநிலங்களுக்கென தனித்தனி கல்வி முறைகள் இருந்தன. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் இரு தென்மாநில மொழி கற்பிக்கப்பட வேண்டும். அதே மாதிரி இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும் என அ968 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு..பின்னர் கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட பிறகு 1986 கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் மும்மொழிக்கொள்கையை செயல்படுத்த முடியாது என முறையிடப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்கள் தான் இதை செயல்படுத்தவிடாமல் தடுத்தது. இந்தி, ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகளை கற்பிக்க அவர்களிடம் தகுதிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என அவர்கள் கூறினர். என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட ராஜ்தீப் தேசாய் 1968,1986 நீங்கள் சொன்ன இரண்டு காலகட்டத்திலும் உங்கள் கூட்டணியான காங்கிரஸே ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் தான் மும்மொழிக்கொள்கையை ஆதரித்துள்ளது. ஆனால் தற்போது உள்ள பாஜக அரசு இந்தி கட்டாய மொழி அல்ல என்றே குறிப்பிட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதில் டென்ஷனான அமைச்சர் பிடிஆர் நாங்கள் அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இல்லை நாங்கள் யாருடன் கூட்டணியில் தற்போது இருக்கிறோம் என்பது முக்கியமில்லை. நாங்கள் எங்கள் தமிழ்நாட்டில் 2 மொழிகள் மட்டுமே கட்டாயமாக கற்பிப்போம், இருமொழிக்கொள்கையை தான் பின்பற்றுவோம். இதுவே எங்களுக்கு கல்வியில் நல்ல பலனை அளித்துள்ளது. தமிழ்நாட்டை விட சிறந்து விளங்கும் மும்மொழிக்கொள்கையை பின்பற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தை காட்ட உங்களால் காட்டமுடியுமா? 
அமைச்சர்களின் மகன்கள் எந்த மொழி படிக்கிறார்கள் இந்தி கற்றுக்கொள்வது இல்லையா என கேள்வி எழுப்பாதீர்கள். தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் தான் இருக்கிறோம் ஆனால் ஒட்டுமொத்தமாக மில்லியன் கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான நடைமுறையையே பின்பற்ற முடியும். என தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய ராஜ்தீப் தேசாய் உங்களிடம் இந்தி கற்பிக்க தகுதிபெற்ற ஆசிரியர்கள் இல்லையா? அதனால் தான் மும்மொழிக்கொள்கையை எதிர்க்கிறீர்களா என பற்றவைக்க டென்ஷனான பிடிஆர் தமிழ்நாட்டை விட சிறந்த ஒரு மாநிலத்தை உங்களால் காட்ட முடியுமா என ஓபன் சவால் விடுத்து மாஸ் காட்டியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram