Prajwal Revanna Arrest : ”பொறுமையை சோதிக்காதே வந்துடு” எச்சரித்த தேவகவுடா! பிரஜ்வல் ரேவண்ணா கைது!
பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருந்த நிலையில், இன்று அதிகாலை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து சிஐடி போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
கர்நாடக அரசியலில் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. தாத்தாவோ முன்னாள் பிரதமர் தேவகவுடா, சித்தப்பாவோ முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி. இவர் மீது அண்மையில் நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வண்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது, குறிப்பாக அதன் சில வீடியோக்கள் சமூக வளைத்தளங்களில் பரவி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதர்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக கர்நாடக மாநிலத்தின் ஹசன் தொகுதியில் களமிறங்கி இருந்தார் பிரஜ்வல் ரேவண்ணா. இந்நிலையில் தான் கர்நாடகாவில் முதற்கட்ட தேர்தல் முடிந்த அடுத்த நாள், ஏப்ரல் 27ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா மாயமானார். தன்னுடைய பாஸ்ப்போர்டை பயண்படுத்தி வெளிநாட்டுக்கு அவர் தப்பி சென்று விட்டதாக சொல்லபட்டது.
ஜெர்மனிக்கு தப்பி ஓடிய அவர் “உண்மை விரைவில் வெளி வரும்” என்று தன்னுடைய சொசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தனிப்படை அமைத்து கர்நாடக போலீஸ் சல்லடை போட, பாஜக தான் பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு தப்பித்து செல்ல விட்டுவிட்டது என காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது, மேலும் அவருடைய பாஸ்ப்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் கர்நாடக அரசியலை ஆட்டம் காணவைத்த இந்த விவகாரத்தில் “உடனே நாடு திரும்பி விசாரணையை எதிர்க்கொள்ளுமாரு முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார்”.
குறிப்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா “என்னுடைய பொறுமையை மேற்கொண்டு சோதிக்காதே, எங்கிருந்தாலும் உடனே வந்த சரணடைந்துவிடு என்று காட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் தான் அடுத்த நான்கே நாட்களில் நாடு திரும்பி உள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. இன்று அதிகாலை ஜெர்மணியில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்தே சிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று விசாரணை தொடங்கும் நிலையில், பல்வேறு உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.