Varunkumar IPS | கட்டம் கட்டிய வருண் IPS.. கைதாகிறாரா சீமான்.? முற்றும் மோதல்!

Continues below advertisement

மிரட்டல் விடுத்த யாரையும் விட மாட்டேன்..ஆபாசத்திற்கும், அவதூறுக்கும்  100% இறுதி முடிவுரை எழுதுவேன்.. சட்ட போராட்டம் தொடரும் திருச்சி எஸ்பி வருண் ஆக்ரோஷம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர் சந்திப்பில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரை தகாத வார்த்தைகள் மற்றும் மிரட்டும் விதத்தில் பேசியதாகவும் அதே போல க்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோரும் வருண்குமார் குறித்து அவதூறான கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது .நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் வருண் குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்து ஆபாசமாகவும் மிரட்டும் விதமாகவும் கருத்துக்களை பரப்பி உள்ளனர்.

இது குறித்து  திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகரளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில்  ஒரு நபரை அவமதிப்பது, அமைதியை சீர்குலைக்கும் வகையில் கருத்து பதிவிடுவது, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே  சமூக வலைதளங்களில் காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சியை  சேர்ந்த கண்ணன் மற்றும்  திருப்பதி ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண் குமாருக்கு சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிப்பதற்குள் செத்துடு போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி காவல்துறை உயர் அதிகாரி என்றும் பார்க்காமல் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் அவரது மனைவியும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே ஐபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் தொடர்பாக மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் கருத்துக்களை பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது.. அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம்  தொடரும். இதை தூண்டி விட்ட நபர்களை நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல் 100 சதவீதம் எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம் என தெரிவித்துள்ளார்".

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram