PMK Police argument |”எந்த ஏரியா? ஓவரா பேசுற”பாமகவினர்- POLICE வாக்குவாதம்!வாக்குச்சாவடியில் பதற்றம்
”எந்த ஏரியா? ஓவரா பேசுற”பாமகவினர்- POLICE வாக்குவாதம்!வாக்குச்சாவடியில் பதற்றம்
விக்கிரவாண்டி வாக்குச்சாவடியில் பாமகவினருக்கும் தலைமை காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. பாமக வேட்பாளர் அன்புமணி பல்வேறு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று வாக்குப்பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்தநிலையில், கக்கனூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற பொழுது தலைமை காவலர் சேகர் பாமக வேட்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வேட்பாளர் அன்புமணியை தலைமை காவலர் சேகர் ஒருமையில் பேசியதாக பாமகவினர் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர்.
காவலர் சேகர் மது போதையில் இருந்ததாக பாமகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து தலைமை காவலர் சேகர் குடித்து உள்ளாரா என்பதை ஆய்வு செய்ய முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டார்.
வாக்குச்சாவடி மையத்திலேயே வைத்து காவலருக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.