Kappalur Tollgate | ஆர்.பி.உதயகுமார் போராட்டம்! குண்டுக்கட்டாக தூக்கிய POLICE! கப்பலூர் டோல்கேட்

Continues below advertisement

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமாரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை திருமங்கலம் வழியாக திண்டுக்கல்-கன்னியாகுமரி செல்லும் நான்கு வழிச்சாலையில் விதிமுறைக்கு புறம்பாக கப்பலூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என 12 ஆண்டுகளாக உள்ளூர் வாகன ஓட்டிகள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து அவ்வப்போது கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டண விலக்கு அளித்து வந்தது.

கடந்த வாரம் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில், உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 2020 ஆம் ஆண்டு முதல் 24 வரை 4ஆண்டுகள் சுங்கச்சாவடியை கடந்து சென்றதாக கூறி அதற்கு சுங்க கட்டணம் பாக்கி உள்ளதாக ரூபாய் ஐம்பதாயிரம் முதல் 22 லட்சம் வரை கட்டணம் செலுத்த கோரி வாகன ஓட்டிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கிடையாது எனவும் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன ஓட்டிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித சமரசமும் எட்டப்படாத நிலையில் ஆர்.பி.உதயகுமாரை குண்டு கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்ட ஆர் பி உதயகுமாரை கீழே இறக்கி விட வேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக பேருந்து முற்றுகையிட்டு ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram