PM Modi Speech : ’’டீ கிளாஸ் கழுவினேன்’’உருக்கமாக பேசிய மோடி
’’டீ கிளாஸ் கழுவினேன்’’உருக்கமாக பேசிய மோடி
’’ டீ கிளாஸ் கழுவி தான் நான் வளர்ந்தேன்’’எனக்கும் டீக்கடைக்குமான பந்தம் மிகவும் ஆழமானது;’’ என மக்கள் முன்னிலையில் பிரதமர் மோடி உருக்கமாக பேசியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட வாக்குப்பதிவை நெருங்கிய நிலையில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.வரும் ஜூன் 4 தேர்தல் முடிவுகள் வெளியாகி aடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்பது தெரியவரும்.
இந்நிலையில் மிர்சாபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது இளம்பருவ அனுபவங்களை பகிர்ந்து மிகவும் உருக்கமாக பேசியுள்ள்ளார்.
மக்கள் முன்னிலையில் பேசிய அவர், நான் சிறு வயதில் தட்டு, டீ கிளாஸ்களை கழுவி தான் வளர்ந்தேன்..டீ விற்று தான் வளர்ந்தேன் எனக்கும் டீக்குமான பந்தம் மிகவும் ஆழமானது என பேசியுள்ளார்.
பிரதமராக மாறிய டீக்கடைக்காரர் என மோடிக்கு பல விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது வெளிப்படையாக தனது பால்ய கால அனுபவங்களை தேர்தல் நேரத்தில் பகிர்ந்துள்ளார்.
அதிலும் இளம்வயதில் டீ விற்று தான் பிழைத்தேன் என தனது கஷ்டங்களை கூறி மக்களிடம் வாக்கு சேகரித்துள்ளது தனிகவனம் பெற்றுள்ளது.
மேலும் பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், மற்றும் ஏழை மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.