PM Modi | ”மதத்தை வைத்து இடஒதுக்கீடு! அரசியலமைப்புக்கே இழுக்கு” ABP-க்கு மோடி EXCLUSIVE பேட்டி

Continues below advertisement

எதிர்க்கட்சி தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாக பிரதமர் மோடி ABP குழுமத்தின் ஓர் அங்கமான பெங்கால் மொழித் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 1ம் தேதி தேர்தல் நிறைவு பெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆட்சியை பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில், கடைசி வாக்குப் பதிவுக்கு 4 நாட்களும், வாக்கு எண்ணிக்கைக்கு 7 நாட்களே உள்ள நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி, ABP குழுமத்தின் ஓர் அங்கமான பெங்கால் மொழித் தொலைக்காட்சிக்கு பிரிவான ABP  அனந்தாவுக்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

நிர்வாக பணிகள், எதிர்க்கட்சிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதியில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி வெளிப்படையாக பேசியுள்ளார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என அவரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு, எதிர்க்கட்சி தலைவர்களுடன் தனக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியுள்ளார். சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து கவலையடைந்ததாகவும், அப்போது ஆறுதல் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். 

ஓபிசி சான்றிதழ்களை ரத்து செய்த கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு, ’ மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். மேற்கு வங்க முதல்வர் தீர்ப்பை எதிர்ப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்.
இருப்பினும், நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் இடஒதுக்கீடு ஒதுக்கப்பட வேண்டும்.  மேலும், "அரசியல் நிர்ணய சபையில் இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடந்தபோது - மத அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய முடியாது என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.  மத அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது. நான் அளித்த இடஒதுக்கீடு மத அடிப்படையில் இல்லை. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்".
 "மதத்தின் பெயரால் நாட்டைப் பிரித்துவிட்டோம். இப்போது மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது. இது வாக்கு அரசியல். மேற்கு வங்கத்தின் சுமார் 77 சமூகங்கள் ஓபிசி ஆக்கப்பட்டன. இதெல்லாம் ஓட்டுக்காக செய்யப்பட்டது” என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram