PIB On Mamata | பொய் சொன்னாரா மம்தா? மத்திய அரசு சொல்வது என்ன? FACT CHECK!

Continues below advertisement

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மைக் அனைக்கபட்டதாக சொல்லபடுவது ஒரு தவறான தகவல்.. நாங்கள் பெல் கூட அடிக்கவில்லை என்று பி.ஐ.பி மறுத்துள்ளது.. இந்நிலையில் உண்மைக்கு புறம்பான தகவலை செய்தியாளர்கள் மத்தியில் சொன்னாரா மம்தா என்ற கேள்வி எழுந்துள்ளது.. 

டெல்லியில் இன்று பிர்தமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து INDIA கூட்டணியை சேர்ந்த பல முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், இமாச்சல பிரதேசத்தின் முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, கர்நாடகா முதல்வர்  சித்தராமையா,  தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் புறகணித்தனர்.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி "நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பாரபட்சமான பட்ஜெட்டுக்கு எனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவிப்பேன்" என்றார். 

இந்நிலையில், தான் பேசுவதற்கு உரிய நேரம் கொடுக்கவில்லை என்று  நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து 'மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  வெளிநடப்பு செய்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் பேச விரும்பினேன், ஆனால் என்னுடைய மைக் அனைக்கபட்டுவிட்டது. என்னை 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். ஆனால் மற்ற முதல்வர்கள் 10-20 நிமிடம் வரை பேசினார்கள். எதிர்கட்சிகள் புறகணித்த நிலையிலும் நான் பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச விடாமல் அவமானபடுத்தி விட்டார்கள் என்று தெரிவித்ததிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசின் அதிகாரபூர்வ ஊடக தளமான Press information buruea-ன் உண்மை அறியும் குழு இதனை மறுத்துள்ளது.

 எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளர் PIB fact check unit “நிதி ஆயோக்கின் 9வது கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரின் மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக சொல்லபடுகிறது.

இது ஒரு தவறான தகவல்

CLOCK-ல் மேற்குவங்க முதல்வரின் நேரம் முடிந்துவிட்டது என காட்டியது, ஆனால் அவருடைய பேச்சை குறிக்கிடும் வகையில் பெல் கூட அடிக்கபடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நிதி ஆயோக்கில் மம்தா புறக்கணிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு பலர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை என்று PIB  மறுப்பு தெரிவித்துள்ள விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram