Salem Nari Kuravar | ”நாங்களும் மனுசங்க தான்” ஊழியர்கள் செய்த செய்ல் நெகிழ்ச்சியில் நரிக்குறவர்கள்

சேலத்தில் நடிகர் தனுஷ் நடித்த ராயன் படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களை சிரித்த முகத்துடன் அனுமதித்த  தியேட்டர்கள் ஊழியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது


நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 50வது படமான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் நேற்றைய  தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
இந்த நிலையில்சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள டிஎன்சி திரையரங்கில் வெளியாகி உள்ள ராயன் திரைப்படத்தை காண 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன் குவிந்தனர். 

குறிப்பாக நரிக்குறவர்களை தியேட்டர்களுக்குள் அனுமதிக்காமல் பல்வேறு இடங்களில் அவமதித்து வந்த நிலையில் சேலத்தில் பிரபல மாலில் செயல்பட்டு வரும் திரையரங்கில் நரிக்குறவர்கள் அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டுகளித்தனர். 

மற்ற இடங்களில் உள்ள திரையரங்குகளில் எங்கள் இனத்தவர்களை திரைப்படம் பார்க்க சக மனிதர்கள் என்ற எண்ணத்தோடு அனுமதிக்க வேண்டும் எனவும் தற்போது எங்களை அனுமதித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்தனர்.திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவர்கள் நடிகர் சூரியின் கருடன் படம் பார்க்க திரையரங்கில் அனுமதிக்கப்படாத சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சேலத்தில் நரிக்குறவர்களை சிரித்த முகத்துடன் அனுமதித்த  தியேட்டர் உரிமையாளர்கள்  மற்றும் ஊழியர்களின் செயல் பாராட்டை பெற்று வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola