
Parasakthi Title Issue | பராசக்தி TITLE மாத்துங்கஅடம் பிடிக்கும் திமுகவினர் தலையிடுவாரா உதயநிதி?
கலைஞர் கருணாநிதி வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படத்தின் டைட்டில்லை தற்பேது சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கு வைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிவருகிறது. தயவுசெய்து படத்திற்கு வேறு டைட்டில் வையுங்கள் பராசக்தி என்றால் அது கலைஞரின் பராசக்தியாகத்தான் இருக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அம்மாள் என்றைக்கடா பேசினாள்? அறிவு கெட்டவனே என்ற ஒற்றை வசனம் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது. பகுத்தறிவு, சமூக நீதி , சமத்துவம், என திராவிட அரசியலை பேசிய இந்த படத்தில் தனது வசனத்தின் மூலம் பட்டைதீட்டியிருப்பார் கலைஞர் கருணாநிதி. ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும் .
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், நேசனல் பிக்சர்ஸ் பிஏ பெருமாள் முதலியார் தயாரிப்பில் கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம் பேசிய அரசியல் அன்றைய ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பாடமாகவே இருக்கிறது. 70 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் அரசியல் சூட்டுடன் இருக்கும் பராசக்தி திரைப்படம் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது. இப்போது அரசியல் களத்தில் இல்லை சினிமாகளத்தில்.
ஆம், சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25 வது படத்திற்கு “பராசக்தி”என்ற பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ரெட் ஜெயண்ட்மூவிசும் படத்தில் இணைந்திருக்கிறது. இந்த சூழலில் தான் கலைஞர் கைவண்ணத்தில் உருவாகி சமூகப்புரட்சி செய்த “பராசக்தி” என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் 25 படக்குழு கைவிடவேண்டும் வேறு எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் ஆனல் இந்த டைட்டில் வைக்க வேண்டும் என்று சோசியல் மீடியாவில் பலர் போர்க்கொடி தூக்கிவருகின்றனர்.
கலைஞர் வசனத்தில் உருவான பராசக்தி படம் எடுக்கப்பட்ட ஸ்டுடியோ வான ஏவிஎம் நிறுவனம் சிவகார்த்திக்கேயன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தாலும், திமுகவினர், சினிமா ரசிகர்கள், அகில உலக சிவாஜி ரசிகர் பேரவை, சிவாஜி குடும்பத்தார் உள்ளிட்டோர் பராசக்தி என்ற டைட்டிலை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கைவைத்துள்ளனர்.
தருமபுரி முன்னாள் எம்.பி. செந்தில் குமார், சிவாஜி குடும்பத்தாரும், கலைஞர் குடும்பத்தாரும் தமிழ் திரையுலகின் அழியா காவிய படைப்பு ஒரே ஒரு 'பராசக்தி' மட்டும் தான் இருக்க முடியும் என்பதினை உறுதி செய்ய வேண்டும். அது தான் மாபெரும் இரு ஆளுமைகள் நடிகர் சிவாஜி கணேசன் மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை.”என்று கூறியிருக்கிறார்.
டான் பிக்ஸர்சின் நிறுவனர் ஆகாஷ் பாஸ்கரன் திமுகவிற்கு நெருக்கமானவர் மறுபுறம் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனும் உதயநிதிக்கு சொந்தமானதுதான். இதனால் இந்த டைட்டிலை கண்டிப்பாக படக்குழு திரும்ப பெரும் என்று கூறப்படுகிறது