P Chidambaram Slams Modi : 6 கோடி வேலைவாய்ப்பா! ஆதாரம் இருக்கா மோடி? ப. சிதம்பரம் சரவெடி

Continues below advertisement

 "6 கோடி வேலைவாய்ப்பா! ஆதாரம் இருக்கா மோடி?" ப. சிதம்பரம் சரவெடி

 

6 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினேன் என சொன்னீங்களே மோடி ஆதாரம் காட்ட முடியுமா என ப. சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகளானது வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மோடி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். 2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கியது என்று மோடி தெரிவித்திருந்தார்.

இதுக்குறித்து ப.சிதம்பரம் தனது எக்ஸ் வளைதள பக்கத்தில் சரமாரியாக கேள்வி ஏழுப்பியுள்ளார்.

பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அந்த அறிக்கையை ஆதரிக்கும் தரவு அவரிடம் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

மரியாதையுடன், இங்கே சில கேள்விகளை மோடியிடம் கேட்கிறேன்

1. தயவு செய்து தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா? 
2. ஏன் 2019 உடன் நிறுத்த வேண்டும்?   2019 மற்றும் 2024 க்கு இடையில் என்ன நடந்தது? 
3. ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டன என்றால், 2014-2019ல் உருவாக்கப்பட்ட மொத்த வேலைகளின் எண்ணிக்கை என்ன? 
4. பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை விகிதம் 42 சதவீதமாக இருப்பது ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா? 
5. ஐஐடியில் 2024 வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை?ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?

ப.சிதம்பரம் மோடியிடம் சரமாரியாக கேள்வி ஏழுப்பியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram