Arvind Kejriwal on PM Candidate Rahul : மம்தா பாணியில் கெஜ்ரிவால் பிரதமர் வேட்பாளரா ராகுல்?

Continues below advertisement

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் எனக்கு பிரதமர் ஆக விரும்பவில்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகளானது வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மக்களவை தேர்தல் குறித்து பேட்டியளித்தார். 

ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கும், இந்திய அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கெஜ்ரிவால், எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என தெரிவித்தார்.  இந்திய அணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்யப்படும்" என்றார். 

உங்களுக்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா என கேள்விக்கு, ஆம் ஆத்மி கட்சியானது சிறிய கட்சியாகும். மக்களவை தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், பிரதமராகும் எண்ணம் எனக்கு இல்லை  என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு,  இந்த தலைப்பில் எந்த விவாதமும் தற்போது வேண்டாம்.  பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என   அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

கெஜ்ரிவால் சிறையில் இருந்த போது, அவரது மனைவி போராட்ட களத்துக்கு வருவதை பார்க்க முடிந்தது. கெஜ்ரிவால் கைது குறித்தும், அவரது மனைவி விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார்.  

இந்நிலையில், உங்களது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு அரசியல் ஆர்வம் உள்ளதா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, எனது மனைவிக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. எதிர்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram